Header Ads Widget

Responsive Advertisement
“துளசியில்லாமல் பெருமாள் கோயில் இல்லை, வில்வம் இல்லாமல் சிவனின் ஆலயம் இல்லை” என்ற பழமொழிக்கு ஏற்ப இத்திருக்கோயிலின் தல விருட்சமாக வில்வ மரம் அமைந்துள்ளது.சிவனுக்கு வில்வ இலைகளால் அர்ச்சிப்பது மிக விசேஷமானது என்பது சிவனை வழிபடுகிறவர்களின் நம்பிக்கை. குறிப்பாக சிவ ராத்திரியின் போது கண்விழித்து சிவனை வில்வம் கொண்டு துதித்தால் எல்லா வினைகளிலிருந்தும் காப்பாற்றும் என்பார்கள். இதற்கு அடிப்படையான புராணக் கதை ஒன்றுண்டு. வேடன் ஒருவன் வேட்டைக்குச் சென்றான். அவனை புலியொன்று துரத்த, ஓடிப்போய் அருகிலிருந்த மரத்தின்மீது ஏறி அமர்ந்து கொண்டானாம்.மரத்தடியில் அமர்ந்திருந்த புலி அவனை உண்பதற்காக காத்திருந்தது. தன்னை அறியாமல் தூங்கிவிட்டால் கீழே விழுந்து விடுவோம் என்பதற்காக, இரவு முழுவதும் மரத்திலிருந்து ஒவ்வொரு இலைகளாகப் பறித்துக் கீழே போட்டான்.
அவன் ஏறியமர்ந்தது வில்வ மரம். மரத்திலேறியிருந்த அந்த இரவு எதேச்சையாக சிவராத்திரி நாளாக அமைந்துவிட்டது. வில்வ இலைகள் விழுந்த இடத்தில் சிவலிங்கம் ஒன்று இருந்ததாம். பொழுது புலர்ந்தது. மரத்தடியில் அமர்ந்திருந்த புலி இனி அவன் கீழிறங்க மாட்டான் என்று ஏமாற்றத்தோடு காட்டுக்குள் ஓடிவிட்டதாம். தன்னை அறியாமலே அவன் செய்திருந்தாலும், தூங்காமல் விழித்திருந்து வில்வ இலைகளால் சிவபூஜை செய்ததால் மரணத்திற்குப் பின் அவன் முக்தி அடைந்தானாம் .
மற்றொரு செவி வழிக்கதையில் இராவணனின் தாயார் ஒரு கோடி லிங்கங்களை வைத்து வழிபட வேண்டும் என்ற தன் விருப்பத்தை மகனிடம் கூறினாராம்; அத்தனை லிங்கங்களுக்கு எங்கே போவது என்று புரியாமல் சிவாச்சார்யர்களை அணுகி இராவணன்ஆலோசனை கேட்டானாம்; அதற்கு அவர்கள், "வாழ்நாள் முழுவதும் தினமும் ஆத்ம லிங்கத்தை ஒரு வில்வ இலையால் பூஜித்து சிவநாமத்தை உச்சரித்தால், ஒரு கோடி லிங்கங்களை வைத்து வழிபட்டதற்கு இணையான பலன் கிடைக்கும்' என்று கூறியதாகவும், அத்ன்படியே இராவணனின் தாயார் வழிபட்டதாகவும் சொல்லப்படுகிறது.. சிவபெருமானுக்கு பூஜை செய்யப்படும் வில்வம் ஒரு சிறந்த மூலிகையாகும். வில்வம் பல விதங்களில் பெருமை பெற்றதாகும். சிவனுக்கு மிகவும் பிடித்த வில்வத்திற்கு நிர்மால்ய தோஷம் கிடையாது. அதாவது வில்வத்தை பறித்து எத்தனை நாட்கள் ஆனாலும் பூஜை செய்ய பயன்படுத்தலாம் தவிர ஒருமுறை பூஜைக்கு பயன்படுத்திய வில்வத்தை மீண்டும் பயன்படுத்தலாம் இது வேறு எந்த மலருக்கும் இல்லாத பெருமையாகும்.

1 Comments

Help us make more transplants possible!
We are urgently in need of kidney donors in LS foundation center to help patients who face life time dialysis problem unless they under go Kidney Transplant. Here we offer financial rewards to interested donors. For more details contact us via Email: kidneylivertc@gmail.com